Education
கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ முதுநிலை மற்றும்‌ முனைவர்‌ பட்டப்படிப்பு (Ph.D) 2022-23 மாணவர்‌ சேர்க்கை துவக்கம்‌..!
SimpliCity News Team · 27 Jun 2022
கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) 2022-23 மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம் வாயிலாக 8 கல்வி வளாகங்களில் 32 துறைகளில் முதுகலைப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்குகிறது. 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 27.06.2022 அன்று முதல் தொடங்குகிறது.
இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 27.06.2022 அன்று முதல் தொடங்கி 08.08.2022 (நள்ளிரவு 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதாரர்கள் இணையவழியாக முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை, முதுநிலை (B.SC / M.Sc/M.Tech) முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் (அ) கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் (Course Completion Certificate) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
எனினும் பட்டப்படிப்பு சான்றிதழைச் சமர்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு, முதுநிலை மாணவர் சேர்க்கை (2022-23) குறித்த தகவல் கையேட்டை படிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்பு கொள்ள 94690-50710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.